Friday, 7 February 2014

1.வித்தியாசமான தீவு
  
 

இந்த பூமியில் இருக்கும் தீவுகளில் இந்தியப் பெருங்கடலில் உள்ள சோகோட்ரா தீவு (Socotra Islands) ஒரு புதிரான இடம். ஏனெனில் இந்த தீவுகளில் உள்ள அனைத்து மரங்களும், விலங்குகளும் வித்தியாசமான வடிவத்தோடு காணப்படும். இது போன்ற வடிவம் கொண்ட மரங்கள் மற்றும் விலங்குகளை எங்கும் காண முடியாது என்பதே இதன் சிறப்பு


2.சஹாரா பாலைவனம்

உலகில் உள்ள வித்தியாசமான இடங்களில் சஹாரா பாலைவனத்தில் உள்ள ரிச்சட் வடிவம் (Richat Structure) ஒன்று. சொல்லப்போனால், அதை சஹாராவின் கண் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த இடத்தின் அமைப்பு பரந்த, விரிந்த பாலைவனத்தில் வண்ணமயமாக இருப்பதோடு, மேலும் பார்த்தால் கண்கள் சலிக்காமல் பார்க்கும் அளவுக்கு அமைந்துள்ளது.


3.கற்கள் தானாக நகரும் வறண்ட இடம்
 
இந்த இடத்திற்கு ரேஸ்ட்ராக் பால்யா (Racetrack Playa) என்று பெயர். இது கலிபோர்னியாலிவல் உள்ள ஒரு வறண்ட ஏரி என்றாலும், கண்ணுக்கினிய ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால், இந்த இடத்தில் இருக்கும் கற்கள் தானாக நகர்கிறது என்பது தான். மேலும் அவ்வாறு நகரும் கற்கள் நகர்ந்ததற்கான அடையாளத்தோடு நகர்கிறது என்பது தான் இதன் சிறப்பு. அதிலும் இந்த கற்கள் பலத்த காற்றின் காரணமாக நகர்கிறது என்பது உண்மை. அப்படியெனில் எந்த அளவு காற்றடிக்கும் என்று யோசித்து பாருங்களேன்...

4.புள்ளி புள்ளியாக காணப்படும் ஏரி

இந்த சலைன் அல்கலி ஏரி (saline alkali lake) பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒசொயூஸ் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீரில் 8-10 கனிமங்கள் உள்ளன. இதனால் கோடை காலத்தில் இங்கு தண்ணீர் ஆவியாகி, அந்த கனிமங்களுடன் சேர்ந்து, நீரின் மேற்பரப்பில் புள்ளிப் போன்ற ஒரு தோற்றத்தை தருகிறது. இதனால் அந்த ஏரி பார்க்க ஓட்டை ஓட்டையாக இருப்பது போன்று காணப்படும்.

5.பள்ளத்தாக்கில் கசியும் சிவப்பு நிறத் தண்ணீர்
 
பள்ளத்தாக்குகள் (McMurdo Dry Valleys) என்று பெயர். பொதுவாகவே அண்டார்டிக்கா மிகவும் குளரான இடம் என்றாலும், இந்த இடத்தில் மட்டும் பனிமூட்டம் இல்லை. மேலும் இந்த பள்ளத்தாக்கின் நீரூற்றுகளில் இருந்து சுடு தண்ணீர் வெளியே கசியும். அவ்வாறு வரும் நீர் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று வெளிவரும். ஏனெனில் இந்த தண்ணீரில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இந்த இடத்தில் தண்ணீர் சிவப்பு நிறத்தில் கசிவதால், இது வித்தியாசமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
6. எரிமலைக் குளம்
 
இந்த குளம் இயற்கைப் பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு வித்தியாசமான இடங்களில் ஒன்றாகும். இந்த இடம் பம்முக்ளே (Pamukklae) என்னும் இடத்தில், எரிமலையின் வெடிப்புகள் காரணமாக நீரூற்று ஏற்பட்டு, அதன் பக்கவாட்டில் கால்சியம் கார்பனேட் அதிக அளவு சேர்ந்து குளம் போல் உருவாக்கியுள்ளது. இந்த குளத்திற்கு ட்ரேவெர்டின் குளம் (Travertine Pool) என்று பெயர். மேலும் இந்த குளம் சற்று சரிவாக படிக்கட்டுகள் போன்று அமைந்துள்ளது.
Read More »

கம்ப்யூட்டர் வர்த்தகத்தை கைவிடுகிறது சோனி நிறுவனம்

 

டோக்கியோ: ஆண்டுக்கு 6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால், கம்ப்யூட்டர் வர்த்தகத்தை கைவிடுவதோடு 5,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய சோனி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:சோனி நிறுவன தயாரிப்புகளான பிராவியா டிவி, வீடியோ கேம்ஸ், பிளே ஸ்டேஷன் உள்ளிட்டவைகளை உலகம் முழுவதும் மக்கள் ஆவலுடன் வாங்கி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் தென் கொரிய தயாரிப்பான சாம்சங் போன்றவைகள் உலக சந்தைக்கு பெருமளவுக்கு வந்ததைத் தொடர்ந்து சோனி நிறுவனத் தயாரிப்பான கம்ப்யூட்டர் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சோனி நிறுவனத்துக்க கடந்த ஆண்டு மட்டும் ரூ.6,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் தயாரிப்பு உடனடியாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சோனியின் கம்ப்யூட்டர் தயாரிப்பை ஜப்பானை சேர்ந்த ஜேஐபி நிறுவனத்துக்கு கணிசமான விலைக்கு விற்க முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சோனி நிறுவனத்தின் கம்ப்யூட்டர் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜப்பானை சேர்ந்த 1,500 பேர், மற்ற நாடுகளில் உள்ள 3,500 பேர் உள்பட 5,000 பேர் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.

இவர்களை சோனி நிறுவனத்தின் கம்யூட்டர் தயாரிப்பு பிரிவை வாங்கும் புதிய நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் அல்லாது, அவர்களை சோனி நிறுவனத்தின் மற்ற தயாரிப்பு பிரிவுகளில் பணியமர்த்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.சோனி நிறுவனத்தின் செல்போன் மற்றும் வீடியோ கேம்ஸ் உள்ளிட்ட வர்த்தகத்தை பெருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தவும் பணியார்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Read More »